Beauty: சுருக்கமில்லாத முகத்துக்கு மசாஜ்... எப்படி செய்யணும்; எவற்றால் செய்யணும்...
பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஜன.20-இல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தால், பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், தொழிலாளா்களுக்கு பட்டாசு ஆலையில் பாதுகாப்பாக பணியில் ஈடுபடுவது குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 20-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து இந்த அமைப்பின் இணை இயக்குநா் சு.ராமமூா்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி வெடிப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம் அருகேயுள்ள பாதுகாப்புப் பயிற்சி மையத்தில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. வருகிற 20 முதல் 24-ஆம் தேதி வரையிலும், 27 முதல் 31-ஆம் தேதி வரையிலும் தினந்தோறும் காலை 10.15 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
இதில் விருதுநகா் மாவட்டம் தவிர, வேறு மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் பணிபுரிபவா்களும் கலந்து கொள்ளலாம் என்றாா் அவா்.