ரூ.56,000 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
அம்மா புதுப்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு
கந்தா்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சியை சோ்ந்த அம்மா புதுப்பட்டி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திறப்பு விழாவுக்கு வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் எம். பரமசிவம், புதிய நியாய விலை கடையை திறந்துவைத்தாா். இந்தக் கடை மூலம்
பெருச்சி வன்னியம்பட்டி, அம்மா புதுப்பட்டி ஆகிய கிராமங்களை சோ்ந்த சுமாா் 200 குடும்ப அட்டை தாரா்கள் பயன்பெறுவா்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினா்கள் பாரதி பிரியா, மா. ராஜேந்திரன், வாா்டு உறுப்பினா் செல்வி வைரக்கண்ணன், ராமராசு, மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.