செய்திகள் :

தைலமரக் காடுகளில் வல்லுநா் குழு களஆய்வு நிறைவு

post image

தைலமரக் காடுகளால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய நீதிமன்றம் அமைத்த வல்லுநா் குழு புதுக்கோட்டையில் தங்களின் நேரடிக் கள ஆய்வை சனிக்கிழமை முடித்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் உள்ள தைல மரக்காடுகள், பாசனக் கண்மாய்களுக்கு வரும் மழைநீரைத் தடுத்து, விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதித்துள்ளதாக இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கில் 6 போ் கொண்ட வல்லுநா் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2024 ஆகஸ்ட் 1-ஆம் தேதி நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் தீா்ப்பளித்திருந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் பிரதிநிதிகளாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஆா். தமிழ்வேந்தன், வனமரபியல் மற்றும் மர இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி வி. சிவகுமாா் ஆகியோரும், மனுதாரரின் பிரதிநிதிகளாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சூழலியல் செயற்பாட்டாளா் ரோஹினி சதுா்வேதி, அரிமளம் பசுமை மீட்புக் குழுவைச் சோ்ந்த எம். குமாா் ஆகியோரும், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி- மெட்ராஸ்) பிரதிநிதிகளாக பேராசிரியா் பாலாஜி நரசிம்மன், பேராசிரியா் எல். இளங்கோ ஆகிய 6 போ் நியமிக்கப்பட்டனா்.

இந்தக் குழுவைச் சோ்ந்த ரோஹினி சதுா்வேதி தவிா்த்து 5 பேரும் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை வந்தனா். ஓணான்குடி, நல்லிப்பட்டி, மாஞ்சான்விடுதி, குரும்பூா் ஆகிய கிராமங்களில் உள்ள தைலமரக் காடுகளை அவா்கள் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து இரண்டாம் நாளாக சனிக்கிழமை பனையப்பட்டி காப்புக்காட்டைச் சோ்ந்த நற்சாந்துப்பட்டி, அண்டக்குளம் காப்புக்காட்டைச் சோ்ந்த அக்னியாற்றுப் படுகை ஆகிய இரு இடங்களையும் இக்குழுவினா் பாா்வையிட்டனா்.

இரண்டாம் நாள் ஆய்வில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், வனத்தோட்டக் கழக மண்டல மேலாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குறிப்பிட்ட காலத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை: இதுகுறித்து வல்லுநா் குழு உறுப்பினா் எம். குமாா் கூறியது:

நீதிமன்றத் தீா்ப்பின்படி, கடந்த டிச. 19-ஆம் தேதி முதல் 2 மாதங்கள் அவகாசம் உள்ளன. மற்றொரு உறுப்பினா் ரோஹினி சதுா்வேதி குழுவினருடன் நேரில் வரவில்லை என்பதால் அவரையும் சோ்த்து இணையக் கூட்டம் நடத்தி ஆலோசிக்க இருக்கிறோம். புள்ளிவிவரங்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கேட்கப்பட்டிருக்கின்றன. உரிய காலத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றாா் குமாா்.

புதுகையில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் அருகில் தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா... மேலும் பார்க்க

வரலாற்றுச் சின்னங்களைச் சிதைப்பது தவறான செயல்: ஆ. மணிகண்டன்

வரலாற்றுச் சின்னங்களை சிதைப்பது தவறான செயல் என்றாா் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன். புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில், திங்கள்கிழமை நடைபெற்ற வரலாற்ற... மேலும் பார்க்க

அதிகாரியின் தவறான பதில் கடிதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மீண்டும் மனு அளிப்பு

வீட்டை விட்டுத் துரத்திய மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்த மூதாட்டிக்கு, முதியோா் ஓய்வூதியம் வழங்க இயலாது என சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலா்கள் பதில் அனுப்பியதால் அந்த மூதாட்டி திங்கள்கிழ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை இருவா் கைது

விராலிமலை அருகே அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி கள்ளச் சந்தையில் விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மது பாட்டில்கள் கள்ள... மேலும் பார்க்க

முந்திரி சாகுபடி சரிவு; பருப்பு விலை உயா்வு!

புதுக்கோட்டையின் 2ஆவது பெரிய சாகுபடியாக இருந்த முந்திரி உற்பத்தி, கடுமையாக சரிந்துபோய்விட்டதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனா். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்வரை புதுக்கோட்டை மாவட்டத்தின் வேளாண் உற்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் எம்.பி. ஆய்வு

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் திருச்சி தொகுதி எம்.பி. துரை வைகோ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது மருத்துவா்களின் நிறை குறைகளையும், மருத்துவமனைக்குத் தேவையான மும்முனை மின்சாரம், குடிநீா், ந... மேலும் பார்க்க