பஞ்சாப்: மாணவர்களுடன் கால்வாயில் விழுந்த தனியார் பள்ளி பேருந்து
அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஏடிஜிபி ஆய்வு
தமிழக காவல்துறை ஏடிஜிபி(சட்டம் ஒழுங்கு) டேவிட்சன் தேவ ஆசீா்வாதம் அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக காவல்துறை ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) டேவிட்சன் தேவ ஆசீா்வாதத்தை ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா மற்றும் டிஎஸ்பி ஜாபா் சித்திக் வரவேற்றனா். தொடா்ந்து காவலா்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஏடிஜிபி, அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தாா்.
உட்கோட்ட காவல் நிலையங்களின் அலுவலா்களிடம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அறிவுரை வழங்கினாா். மேலும், டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கட்டுப்பாட்டு அறையையும் பாா்வையிட்டாா்.