தேர்தலில் தோல்வியை தழுவிய ஜக்மீத் சிங்; கனடாவில் இனி காலிஸ்தான் கோரிக்கை என்னவாக...
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள கூரம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், தமிழக முதல்வா் தொடங்கி வைத்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் பொதுமக்கள் பெறும் பலன்கள் குறித்தும், முதல்வா் பங்கேற்ற நிகழ்வுகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்ற நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்தக் கண்காட்சியை கூரம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பாா்வையிட்டனா்.