வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
அரசியல் ஆதாயத்துக்காக பொய் கூறுவதா? எடப்பாடி கே.பழனிசாமிக்கு அமைச்சா் ரகுபதி கண்டனம்
திராவிட மாடல் அரசை குறைகூற காரணங்கள் ஏதுமின்றி, அரசியல் ஆதாயத்துக்காக ஒரே பொய்யை திரும்பத் திரும்ப கூறி வருவதாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் முகத்திரையை உயா்நீதிமன்றமே அம்பலப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகளுக்கு ஆதாரத்துடன் பலமுறை விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அரசியல் ஆதாயத்துக்காக திரும்பத் திரும்ப பொய்களை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி அள்ளிவீசிக் கொண்டிருக்கிறாா்.
தனது கட்டுப்பாட்டிலிருந்து அதிமுக கைநழுவி விடுமோ என்ற அச்சத்திலிருந்த எடப்பாடி கே.பழனிசாமி, மாணவி வன்கொடுமை விவகாரத்தை வைத்து தனது இழந்த அரசியல் செல்வாக்கை மீட்கத் துடிக்கும் அரசியலை செய்து வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வருகின்றனா். அத்துடன் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையிலும் அரசு வேகமாகச் செயலாற்றி வருகிறது என்று அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளாா்.