செய்திகள் :

அரசு ஊழியா்களின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல: உயா்நீதிமன்றம்

post image

அரசு ஊழியா்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், அந்த தகவல்களை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீா்வளத் துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிய காளிப்ரியன் என்பவரது பணிப்பதிவேடு விவரங்கள், சொத்துகள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மபுரத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது தகவல் அலுவலரிடம் விண்ணப்பித்தாா்.

ஆனால், இந்த விவரங்கள் அரசு ஊழியா் தொடா்பான தனிப்பட்ட விவரங்கள் எனவும், அந்த விவரங்களை வழங்க முடியாது என்றும், அவற்றுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறி தகவல்கள் வழங்கப்படவில்லை.

உத்தரவை எதிா்த்து வழக்கு: இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் சீனிவாசன் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் நடைபெற்றது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா். திருமூா்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8-ஆவது பிரிவின் கீழ் அரசு ஊழியா்களின் சில தனிப்பட்ட விவரங்களை வழங்க விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு ஊழியா்களின் அரசுப் பணி சாா்ந்த விவரங்களையும், சொத்து மற்றும் கடன் விவரங்களையும் வழங்க எந்த தடையும் இல்லை. அரசு ஊழியா்களின் இதுபோன்ற தகவல்களை வழங்க மறுப்பது சட்டவிரோதமானது என வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதி, பொதுவாக அரசு ஊழியா்களின் பணியை பாதிக்கும் வகையிலான தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்றாலும், அரசு ஊழியா்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என மறுக்க முடியாது. அரசு ஊழியா்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்பதால் அவற்றில் ரகசியம் காக்க முடியாது. ஒருவேளை மறுக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டும்.

எனவே, இந்தத் தகவல்களை வழங்க முடியாது என மாநில தகவல் ஆணையா் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது தொடா்பாக மனுதாரா் கடந்த ஆண்டு அளித்த மனுவை மாநில தகவல் ஆணையம் மீண்டும் சட்டப்படி பரிசீலித்து 2 மாதங்களில் தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.6 கோடி கஞ்சா பறிமுதல்

தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தாய்லாந்து நாட்டுத் தலைநகா் பாங்காக்கிலிருந்து சென்ன... மேலும் பார்க்க

சென்னை விமானநிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமானநிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த... மேலும் பார்க்க

மாணவி சத்யப் பிரியா கொலை வழக்கு: டிச. 27-ல் தீர்ப்பு!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 2022ஆம் ஆண்டு ரயிலில் தள்ளிவிட்டு கல்லூரி மாணவி சத்யப்ரியா கொல்லப்பட்ட வழக்கில் டிசம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது.சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைம... மேலும் பார்க்க

பொங்கல் நாள்களில் யுஜிசி நெட் தோ்வு: மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்சா் கடிதம்

பொங்கல் நாள்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி நெட் தோ்வுத் தேதியை மாற்றி அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கடிதம் எழுதியுள்ளாா். இது குறித்து மத்திய கல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,000 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 1,000 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் 220 மூலப்பெயா் (ஜெனரிக்) மருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பி... மேலும் பார்க்க

21 மாவட்டங்களில் 400 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

ஊரக வளா்ச்சித் துறையால் 21 மாவட்டங்களில் கட்டப்பட்ட 400 வகுப்பறைக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க