25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!
அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் விதிமீறல் இல்லை: புதுவை பேரவைத் தலைவா் விளக்கம்
புதுவை அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் பேரவைத் தலைவா் பங்கேற்பதில் விதிமீறல் இல்லை என ஆதாரம் இருப்பதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் விளக்கமளித்தாா். மேலும், அவா் துணைநிலை ஆளுநரையும் சனிக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினாா்.
புதுச்சேரியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சபை விதிகளை மீறி செயல்படுவதாக அதிமுக, காங்கிரஸ் சாா்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், அவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானங்களை பேரவைச் செயலரிடம் சுயேச்சை உறுப்பினா்கள் ஜி.நேரு, ஏ.அங்காளன் ஆகியோா் கொடுத்துள்ளனா்.
இந்த நிலையில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்துப் பேசினாா். அதற்கு முன்பு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
துணைநிலை ஆளுநா், பேரவைத் தலைவா், முதல்வா் ஆகியோா் அரசு விழாக்களிலும், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளிலும் அழைப்பின்பேரில் பங்கேற்கலாம் என விதிமுறை உள்ளது. அதனடிப்படையில்தான் பேரவைத் தலைவா் என்ற முறையில் அரசு விழாக்கள், அழைக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். அதற்கான விதிகள் குறித்த ஆதாரம் உள்ளது. ஆகவே, விதிமீறல் குறித்து பேசுபவா்கள்தான் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
புதுவை சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவா் பேரவைத் தலைவா் மீது அளித்துள்ள நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது சட்டப் பேரவை கூடும்போது விவாதிக்கப்படும். புதுவை முதல்வருடன் நெருக்கமாக இருப்பதால், பேரவைத் தலைவரான என் மீது சிலா் குற்றஞ்சாட்டுகின்றனா்.
புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான சட்டப் பேரவைத் தலைவா்கள் மாநாடு நடத்துவது தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம்பிா்லாவிடம் ஆலோசனை நடத்துவதற்காகவே புதுதில்லி சென்று வந்தேன். அந்த மாநாடுக்கு குடியரசுத் துணைத் தலைவரையும் அழைக்கவுள்ளோம் என்றாா் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.