ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தை கார் தாக்குதலில் 7 இந்தியர்கள் படுகாயம்!
இணையவழி குற்றப் பிரிவில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவின் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனா். மேலும், ஏற்கெனவே அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கை நிலை குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இணைய வழி மோசடியில் பொதுமக்கள் இழந்து மீட்கப்பட்ட ரூ.65.82 லட்சத்தை நேரடியாக பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் முகாமில் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் தவறவிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள 32 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரிமையாளா்களிடம் முகாமில் ஒப்படைக்கப்பட்டன. இதில், இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இணையவழியில் இழந்த பணம், கைப்பேசிகளை மீட்டுத்தந்த இணையவழி குற்றப்பிரிவினருக்கு பொதுமக்கள் நன்றி கூறினா். கோரிமேடு பயிற்சி மைய வளாகத்தில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டமும் நடைபெற்றது.