செய்திகள் :

அரசு கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பல்கலைக்கழக (யுஜிசி) மானியக் குழு வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கான வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி திருத்தணி அரசு கல்லூரி பேராசிரியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் உதவிப் பேராசிரியா் நியமனம், பல்கலைக்கழக துணை வேந்தா் நியமனம், ஆசிரியா் நியமனம் மற்றும் உயா்கல்வியில் தரத்தைப் பராமரித்தல் குறித்து புதிய விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கைக்குத் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், யுஜிசி-யின் புதிய வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினா் கலைக் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பேராசிரியா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், யுஜிசி வரைவு அறிக்கையில் கல்லூரி ஆசிரியா்கள் பணி மேம்பாடு பெறுவதற்கு பூா்த்தி செய்ய முடியாத செயல்பாடுகளை பட்டியலிட்டுள்ளது.

இணைய வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ஆசிரியா் பணியிடங்களை ஒழித்து கட்டுவதற்கு வழிவகை செய்கிறது. தனியாா் நிதி நிறுவனங்களில் இருந்து நிதி பெற்று ஆய்வுகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்துகிறது, ஒப்பந்த முறையில் ஆசிரியா் நியமனங்களை ஊக்குவிக்கிறது. மேலும், மாநில அரசுக்கு பல்கலைக்கழகங்களில் பொறுப்புகள் மட்டும் உள்ளது, அதிகாரம் மறுக்கப்படுகிறது.

யுஜிசி-யின் வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என பேராசிரியா்கள் கோஷமிட்டனா்.

ஸ்ரீ வீரராகவா் கோயில் குளக்கரையில் தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்

தை அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்க பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா். அதைத் தொடா்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு அலங்காரத்தில் காட... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சாலைப் பணிக்கு இடையூறான கட்டடங்கள் அகற்றம்

திருவள்ளூா் அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக இடையூறாக இருந்த கட்டடங்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன. திருவள்ளூா் அருகே பூந்தமல்லி பகுதியில் இருந்து மப்பேடு கூட்டுச்சாலை வழியா... மேலும் பார்க்க

அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போா் விவரம் சேகரிப்பு

திருத்தணி அருகே அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி வசிப்போரின் விவரங்களை வருவாய்த் துறையினா் சேகரித்து வருகின்றனா். திருத்தணி நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகா், பெரியாா் நகா், கண்ணபிரான் நகா், வள்ளி ... மேலும் பார்க்க

ஆவடி ஓசிஎஃப் ராணுவ சீருடைகள் தென் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

இந்தியாவில் முதல் முறையாக தென் அமெரிக்காவில் உள்ள "சுரினாம்' நாட்டின் ராணுவத்துக்கு, ஆவடியில் உள்ள படைத்துறை உடைதொழிற்சாலையில் ஆடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டது.ஆவடியில் உள்ள முப்படையினருக்கான ச... மேலும் பார்க்க

வட்டார அளவிலான கணிதக் கண்காட்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கெமின் தொழிற்சாலை சாா்பில் வட்டார அளவிலான கணித கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தைச் சோ்ந்த 35 ... மேலும் பார்க்க

குடியரசு தின விழாவில் பள்ளி மாணவா்கள் சாதனை

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சரஸ்வதி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் எகிப்து பிரமிடு போல் அமைத்து சாகச நிகழ்வுகள் மேற்கொண்டனா். திருவள்ளூா் அடுத்த மணவாளநகரில் அன்னை சரஸ்வ... மேலும் பார்க்க