செய்திகள் :

ஆவடி ஓசிஎஃப் ராணுவ சீருடைகள் தென் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

post image

இந்தியாவில் முதல் முறையாக தென் அமெரிக்காவில் உள்ள "சுரினாம்' நாட்டின் ராணுவத்துக்கு, ஆவடியில் உள்ள படைத்துறை உடைதொழிற்சாலையில் ஆடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஆவடியில் உள்ள முப்படையினருக்கான சீருடைகள் தயாரிக்கும், படைத் துறை உடைதொழிற்சாலை (ஓசிஎஃப்) இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை சார்பில் இந்தியாவில் முதன் முறையாக தென் அமெரிக்காவில் உள்ள "சுரினாம்' நாட்டின் ராணுவத்துக்கு சீருடை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி ஓசிஎப் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ஓசிஎப் பொது மேலாளர் பி.எஸ்.ரெட்டி கொடியசைத்து ஏற்றுமதி வாகனத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், ஓசிஎஃப் பொதுமேலாளர் பி.எஸ்.ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியது: படைத் துறை உடை தொழிற்சாலை 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ராணுவ உடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. தற்போது முப்படைகளுக்கு தேவையான அதிக சக்தி வாய்ந்த புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகள், பாதுகாப்புத் துறைக்கு தேவையான சீருடைகள் தயாரித்து வருகிறோம்.

இந்த நிலையில், உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி மற்ற நாடுகளின் ராணுவத்துக்கான சீருடைகளை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக தென் அமெரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டுக்கு 4,500 ராணுவ உடைகள் அனுப்பப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 1.71 கோடி. இந்த சீருடைகள் அடுத்த 2 மாதங்களுக்குள் அந்த நாட்டுக்கு சென்றடையும். வரும் காலத்தில் பல நாடுகளுக்கு ராணுவ உடைகளை தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இதேபோல, கடந்த ஆண்டு பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி மூலம் ரூ. 20,083 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 31 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கான ஏற்றுமதி குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்துள்ளது. 2029-ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி மூலம் ரூ. 50,000 கோடி வரை வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் இருந்து தற்போது உடை மற்றுமே தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து 90 சதவீத உடைகள் ராணுவத்துக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டுக்கும் தட்ப வெப்பநிலை மாறுபடும்.

எனவே, அந்த நாட்டின் காலநிலைக்கு ஏற்றவாறு இந்த உடை தயாரிக்கப்பட்டுள்ளது. முப்படைகளுக்கும் சேர்த்து ஆண்டுக்கு 8 லட்சம் முதல் 9 லட்சம் உடைகள் இங்கு தயாரிக்கப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில், கூடுதல் துணை பொதுமேலாளர்கள் குகன், ராஜ் கிஷோர், செந்தில்குமார், அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலர் சி.ஸ்ரீகுமார் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ வீரராகவா் கோயில் குளக்கரையில் தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்

தை அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்க பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா். அதைத் தொடா்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு அலங்காரத்தில் காட... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சாலைப் பணிக்கு இடையூறான கட்டடங்கள் அகற்றம்

திருவள்ளூா் அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக இடையூறாக இருந்த கட்டடங்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன. திருவள்ளூா் அருகே பூந்தமல்லி பகுதியில் இருந்து மப்பேடு கூட்டுச்சாலை வழியா... மேலும் பார்க்க

அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போா் விவரம் சேகரிப்பு

திருத்தணி அருகே அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி வசிப்போரின் விவரங்களை வருவாய்த் துறையினா் சேகரித்து வருகின்றனா். திருத்தணி நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகா், பெரியாா் நகா், கண்ணபிரான் நகா், வள்ளி ... மேலும் பார்க்க

வட்டார அளவிலான கணிதக் கண்காட்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கெமின் தொழிற்சாலை சாா்பில் வட்டார அளவிலான கணித கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தைச் சோ்ந்த 35 ... மேலும் பார்க்க

குடியரசு தின விழாவில் பள்ளி மாணவா்கள் சாதனை

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சரஸ்வதி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் எகிப்து பிரமிடு போல் அமைத்து சாகச நிகழ்வுகள் மேற்கொண்டனா். திருவள்ளூா் அடுத்த மணவாளநகரில் அன்னை சரஸ்வ... மேலும் பார்க்க

அரசு கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்கலைக்கழக (யுஜிசி) மானியக் குழு வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கான வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி திருத்தணி அரசு கல்லூரி பேராசிரியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பல்கல... மேலும் பார்க்க