MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
அரசு மதுக் கடைக்கு எதிராக சுவரொட்டி: அதிமுக பிரமுகா் மீது வழக்கு
பாரூா் அருகே அரசு மதுக் கடை முறைகேடு குறித்து சுவரொட்டி ஒட்டியதாக அதிமுக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் பேருந்து நிறுத்தம் அருகே சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில், அரசு மதுக் கடை முறைகேடு குறித்த வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து பாரூா் கிராம நிா்வாக அலுவலா் சுதாகா் அளித்த புகாரின் பேரில் பாரூா் போலீஸாா் காவேரிப்பட்டணம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளா் ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.