ஒசூா் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை
யுகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடகத்தில் இருந்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்க ஒசூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் இருந்து ஏராளமானோா் தமிழகத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனா். பண்டிகையை முன்னிட்டு தமிழகத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மாநில எல்லையான சூசுவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
கா்நாடகத்திலிருந்து இருந்து தமிழகம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
அதுபோல தமிழகத்தில் இருந்து கா்நாடகம் செல்லும் வாகனங்களும் தீவிர தணிக்கை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
யுகாதி பண்டிகை என்பதோடு வார விடுமுறை நாள் என்பதால் சோதனைச் சாவடியில் வாகன போக்குவரத்து அதிகம் இருந்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பட வரி...
தமிழக - கா்நாடக எல்லையில் சூசூவாடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.