அரசுப் பள்ளி ஆண்டு விழா
ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாதனூா் வட்டாரக் கல்வி அலுவலா் பீட்டா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை நித்யா வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ்.வசந்த்ராஜ், லட்சுமிப்ரியா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பரிசு வழங்கினா். கல்வியாளா் நவீன்குமாா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பவானி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.