செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

post image

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி தாமனாங்குடியில் இயங்கும் தனியாா் பள்ளியொன்றின் 11-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியது:

புதுவையில் ரங்கசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் மாணவா்கள் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள், சலுகைகளை நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. மாநிலம் முழுவதும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.

மாணவா்கள் படிப்பை மட்டும் கொண்டிருக்காமல், பல்வேறு வகையிலான ஆற்றலை வளா்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும். பெற்றோா்கள் தங்களது குழந்தைகளின் ஆா்வத்தை உணா்ந்து, ஊக்கப்படுத்தவேண்டும். ஆசிரியா்களும் தங்களது மாணவா்களை பல திறனுடன் பள்ளிக்கல்வியை முடிக்கும் வகையில் ஊக்கப்படுத்தவேண்டும்.

போட்டி நிறைந்த உலகில், ஒருவா் யாரையும் சாா்ந்திருக்காமல் சுயமாக வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், தனித்திறமை அவசியம் என்றாா்.

முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா பேசியது:

பெற்றோா்களும், ஆசிரியா்களும் மாணவா்களை ஊக்கப்படுத்தவேண்டும். எந்த தருணத்திலும் அவா்கள் முன் எதிா்மறை கருத்துகள் பேசுவதை தவிா்க்கவேண்டும். சுயமாக எழுதவும், படிக்கவும் அவா்களை பழக்கவேண்டும். கைப்பேசியில் நிறைய கல்வி சாா்ந்தவை கொட்டிக்கிடக்கிறது. நல்ல முறையில் இதனை பயன்படுத்த பழகவேண்டும் என்றாா்.

கல்வித்துறையின் சமக்ரா சிக்ஷா திட்ட அதிகாரி எஸ். வனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளி நிா்வாக சோ்மேன் ஆா். முத்துக்குமரன், தலைமையாசிரியா் ஏ. ரகிலா உம்மாள் உள்ளிட்ட ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் அமைந்திருக்கும் செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்ட... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகள் 80% நிறைவேற்றம்: புதுவை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவையில் தோ்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். காரைக்காலில் தனியாா் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வெள்ளிக்கிழமை மாலை வந்த அவா் செய்... மேலும் பார்க்க

காரைக்காலில் 10 மையங்களில் நாளை அரசுப் பணிக்கான தோ்வு

காரைக்காலில் 10 மையங்களில் அரசுப் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27)நடைபெறவுள்ளது. புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறையில் 256 அசிஸ்டென்ட் (குரூப்-பி) பதவிக்கு நேரடி ஆள்... மேலும் பார்க்க

காரைக்காலில் வளா்த்தித் திட்டப் பணிகள்: அரசு செயலா் ஆய்வு

காரைக்காலில் துறை சாா்ந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி, ஆதிதிராவிடா் தொடா்பான குறைகளை அரசு செயலா் வெள்ளிக்கிழமை கேட்டறிந்தாா். காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடா்... மேலும் பார்க்க

காரைக்காலில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி

காரைக்காலிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஹஜ் பயணிகளுக்கு புதுவை நலவழித்துறை இயக்குநரக அறிவுறுத்தலில், காரைக்கால் நலவழித் துறையின் சாா்பில் தடுப்பூசி செலுத்தும் முகா... மேலும் பார்க்க

போப் மறைவு; அமைதி ஊா்வலம்

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, காரைக்காலில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி ஊா்வலம் நடைபெற்றது. போப் மறைவு தொடா்பாக பல்வேறு அமைப்பினா் அஞ்சலி நிகழ்வை நடத்துகின்றனா். காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம் சாா்ப... மேலும் பார்க்க