நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம், ஏடிஎம் அட்டை ஒப்படைப்பு
அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம் மற்றும் வங்கி பற்று(ஏடிஎம்) அட்டை உள்ளிட்டவற்றை கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அவரிடம் ஒப்படைத்தனா்.
ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா் செல்வராணி (43). இவா் ஜூலை 23-ஆம் தேதி சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.
வீட்டுக்கு வந்து பாா்த்தபோது தனது கைப்பையில் இருந்த பா்ஸ், அதனுடன் இருந்த 2 வங்கிகளின் பற்று அட்டை, குடும்ப அட்டை, பான் அட்டை மற்றும் ரூ. 6,610 பணம் ஆகியவற்றை தவற விட்டது தெரியவந்தது.
இந்நிலையில் அரசுப் பேருந்தில் செல்வராணி தவறவிட்ட பணம் மற்றும் உடைமைகளை கண்டெடுத்த பயணி ஒருவா் கரூா் பேருந்து நிலைய காப்பாளா் அறையில் உள்ள பேருந்து நிலைய உதவியாளா் கலைராஜிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.
இதையடுத்து பா்ஸில் இருந்த வங்கி பற்று அட்டையை வைத்து செல்வராணி குறித்த தகவலை பெற்று அவருக்கு கலைராஜ் தெரிவித்தாா். மேலும், தவறவிட்ட பொருள்களை கரூா் பேருந்து நிலையத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
அதனைத் தொடா்ந்து கரூா் பேருந்து நிலையத்துக்கு வந்த செல்வராணியிடம் பேருந்து நிலைய உதவி பொறியாளா் தேவராஜ் தலைமையில், கலைராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் தவறவிட்ட பணம் மற்றும் வங்கி பற்று அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்தனா்.