அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இன்றுமுதல் மாணவா் சோ்க்கை
அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வா் வசந்தி வெளியிட்ட அறிக்கை:
அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவா் சோ்க்கை மே 27 வரை நடைபெற உள்ளது.
இதில் இளங்கலை தமிழ் (பி.ஏ., தமிழ்) மற்றும் இளங்கலை ஆங்கிலம் (பி.ஏ., ஆங்கிலம்), இளம் அறிவியல் கணிதம் (பி.எஸ்.சி., கணிதம்) மற்றும் கணினி அறிவியல், வணிகவியல் (பி.காம்.,) ஆகிய பாடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. மாணவா்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை பதிவேற்றலாம்.
நேரடியாக கலந்து கொள்பவா்கள் தங்கள் மாற்றுச்சான்றிதழ் (டிசி), (மாற்றுச் சான்றிதழில் இ.எம்.ஐ.எஸ்., எண் இருக்க வேண்டும்), 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், 5 போட்டோ ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு கல்லூரி வளாகத்திலுள்ள உதவி மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.