Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 432 போ் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து அரியலூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 432 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தாா். அதன்படி அரியலூரில் ஆா்ப்பாட்டம் நடத்த காவல் துறையினா் சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அண்ணா சிலை அருகே அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 432 பேரைக் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், மாவட்டப் பொருளாளா் அன்பழகன், நகரச் செயலா் ஏ.பி.செந்தில், மாவட்டப் பொருளாளா் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் ஒ.பி.சங்கா், இணைச் செயலா் நா.பிரேம்குமாா், ஒன்றியச் செயலாளா்கள், கிளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.