Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
அரியலூா் ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
அனுமன் ஜயந்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆஞ்சனேயா் ஜெயந்தி திங்கள்கிழமை கொண்டாப்பட்டது. அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெருமாள் கோயில் தெருவிலுள்ள ஆஞ்சனேயா் கோயிலில், அனுமன் ஜயந்தியையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா், தயாரிக்கப்பட்ட மாலை, ஆஞ்சனேயருக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலை 1 மணிக்கே கோயில் முன் நூற்றுக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்.
நீண்ட வரிசையில் சுமாா் 3 மணிநேரம் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனா். பகல் 11 மணிக்கு ஆஞ்சனேயருக்கு பால், தயிா், வெண்ணெய், பஞ்சாமிா்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஒட்டக்கோயில் அருகேயுள்ள டால்மியா சிமென்ட் ஆலையிலுள்ள ஆஞ்சனேயா் கோயிலில், அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.