அரூரில் ரூ. 10 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
அரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் ஏலம் போயின.
தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மஞ்சள் ஏலம் விடப்படுகிறது. அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 13,619-க்கும், குறைந்தபட்சம் ரூ. 12,649-க்கும் விற்பனையானது. உருண்டை மஞ்சள் அதிகபட்சம் ரூ. 12,369-க்கும், குறைந்தபட்சம் ரூ. 10,269-க்கும் விற்பனையானது.
இதேபோல, வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திலும் மஞ்சள் மூட்டைகள் ஏலம் விடப்பட்டன. அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் விற்பனையாயின என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.