டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்...
அழகுமுத்துக் கோன் தீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்! - கட்சித் தலைவர் புகழாரம்
அழகுமுத்துக் கோன் தீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்த முதலாவது விடுதலைப் போராளி மாவீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எக்ஸ் தளப் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் மரியாதை செலுத்தி பதிவிட்டுள்ளனர்.
— TVK Vijay (@TVKVijayHQ) July 11, 2025
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளப் பதிவில், “வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக் கோன், தாய் நிலத்தின் உரிமை காக்க, அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர்.
வரியும் செலுத்த முடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக் கோன் அவர்களின் பிறந்த நாளில் அவரது தீரத்தையும் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Vijay has praised the bravery and sacrifice of Azhagumuthu Kon.
தாய் மண்ணின் உரிமைக்காக பிரிட்டிஷ் சர்வாதிகாரத்திற்கு எதிராக முதல் குரல் கொடுத்து, வெள்ளையர்களை வீறு கொண்டு எதிர்த்து,தாய்நாட்டின் மானத்திற்காக மரணத்தை முத்தமிடத் தயார் என முழங்கி தாய்மண்ணிற்காக இன்னுயிர் நீத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் #அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது… pic.twitter.com/Da5VFMz5mF
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 11, 2025
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்த்து போராடி இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வீரரும், காட்டாலங்குளத்து மாமன்னருமான அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்ததினம் இன்று.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 11, 2025
தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதி மூச்சு வரை போராடி… pic.twitter.com/vbpHBteJwl
மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தளை அறுக்க அந்நியரை எதிர்த்து வீரப்போர் புரிந்திட்ட பெருமாவீரன்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 11, 2025
வீரமிகு எங்கள் பாட்டனார்
அழகுமுத்துக்கோன்
வீரப்புகழ் போற்றுவோம்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கட்டாலங்குளத்தில்… pic.twitter.com/1yTiNxoejm
இந்திய விடுதலைக்கான ஆரம்ப காலப் போரில், ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்டு, மக்களைக் காக்க தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள் பிறந்த தினம் இன்று.
— K.Annamalai (@annamalai_k) July 11, 2025
மாவீரன் அழகுமுத்துக்கோன் வீரத்தைப் போற்றி, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi… pic.twitter.com/y1WxpFflpP