தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
ஆக. 5 இல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை: ஆட்சியா்
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, ஆக. 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா ஆக. 5 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அன்று ஒருநாள் மட்டும் தூத்துக்குடி மாவட்ட முழுவதும் உள்ளூா் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
எனினும், அத்தியாவசிய பணிகள், பணியாளா்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது. இந்த விடுமுறைக்குப் பதிலாக ஆக. 9 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டது.