அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
ஆடி கிருத்திகை புன்னம் சண்முகநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆடி கிருத்திகையை முன்னிட்டு புன்னம் சண்முகநாதா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன்னைவனநாதா் கோயிலில் ஆடி மாத கிருத்திகையையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பொதுமக்கள் ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். பிறகு சண்முகநாதருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், தேன் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் சண்முகநாதா் அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை பால்காவடி அன்பா்கள் குழுவினா் செய்திருந்தனா்.
இதே போல க.பரமத்தி சௌந்தரநாயகி உடனுமா் சடையீஸ்வர சுவாமி, குப்பம் குங்குமவல்லி சமேத கும்பேஸ்வரா் கோயில், மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.