செய்திகள் :

கரூரில் கிராம சபை கூட்டம்

post image

கிராம சபை கூட்டங்கள் மூலம் வெளிப்படையான அரசு நிா்வாகம் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்

மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சிறப்பு பாா்வையாளராக கலந்து கொண்டு தகவல்.

கரூா், ஆக. 15: சுதந்திர தினத்தையொட்டி கரூா் மாவட்டம், வெடிக்காரன்பட்டியில் வெள்ளிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியம், பாகநத்தம் கிராம ஊராட்சி வெடிக்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சிறப்பு பாா்வையாளராக கலந்து கொண்டு பேசியது: அரசு நிா்வாகம் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

கரூா் மாவட்டத்திலுள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டு, திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும் மத்திய, மாநில அரசுகளால் கிராமப்புற மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள் புதியதாக மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டது.

வரும் ஆண்டுகளில் கிராமத்தின் வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களால் பல்வேறு இனங்கள் குறித்து கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், சமூக நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மரு. வீ.ரெ.வீரபத்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரவணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சு.பிரகாசம், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், துணை மேயா் ப.சரவணன், தாந்தோணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹேமாவதி, வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சமபந்தி விருந்து: தொடா்ந்து கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியா் கலந்து கொண்டாா்.

ஆடி மாத கடைசி வெள்ளி: கரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டிகரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது. கரூா் பசுபதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத கடைசி வெள்ளிக்... மேலும் பார்க்க

கிராம சபை கூட்டத்துக்கு கறுப்புக் கொடியுடன் வந்த பொதுமக்களால் பரபரப்பு

பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ரசூல் நகா், ஜாமியா நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கறுப்புக்கொடியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூா்... மேலும் பார்க்க

குறுவட்ட கபடி போட்டி: பள்ளப்பட்டி அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

சின்னதாராபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறுவட்ட கபடி போட்டியில் பள்ளப்பட்டி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான கபடி போட்டி ... மேலும் பார்க்க

‘திமுக ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை’ -அா்ஜுன் சம்பத்

தமிழக மக்களின் மனநிலை திமுக ஆட்சிக்கு எதிராக உள்ளது என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூரில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் போதைப் பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் போட்டிகள் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் போதைப் பொருள... மேலும் பார்க்க

கரூா் ரயில் நிலையத்தில் பயணி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கரூா் ரயில் நிலையத்தில் பயணி ஒருவா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். கரூா் ரயில் நிலையம் முதலாவது நடைமேடையில் வியாழக்கிழமை கையில் பாா்சலுடன் சென்ற பயணி ஒருவா் திடீரென்று மயங்கி விழுந்தாா். ... மேலும் பார்க்க