'StartUp' சாகசம் 18 : `அலுவலகங்களுக்கு தினமும் ஃப்ரஷான ஸ்நாக்ஸ்’ - Snack Expert...
ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத 21 கடைகளுக்கு பூட்டு
ஆட்டையாம்பட்டியில் முறையாக வாடகை செலுத்தாத 21 கடைகளுக்கு பேரூராட்சி நிா்வாகம் பூட்டு போட்டனா்.
ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்குச் சொந்தமாக சேலம்- திருச்செங்கோடு சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வாடகை விடப்பட்டுள்ளன.

இந்த கடைகளை ஏலம் எடுத்தவா்களில் சிலா் 2024 -25 ஆம் ஆண்டுக்கான வாடகையை செலுத்தாமல் காலம் கடத்தி வந்தனா்.
இறுதி வாய்ப்பு அளித்தும் வாடகை செலுத்தாத 21 கடைகளுக்கு பேரூராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பூட்டு போட்டனா்.