செய்திகள் :

ஆதவ் அர்ஜுனா விளக்கம் ஏற்புடையதல்ல: திருமாவளவன்

post image

ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம் கட்சி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்திருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது,

''கட்சிக்குள் வந்துவிட்டால் எவ்வளவுபெரிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் கட்சியின் நடைமுறைக்கு இணங்க செயல்பட வேண்டியது அவசியமானது.

ஆதவ் அர்ஜுனாவின் இந்த முடிவு, அவருக்கு சரி என்ற அடிப்படையில் மேற்கொண்டுள்ளார். அவரின் குரல் கட்சியின் வழியாக ஒலிக்க வேண்டும்.

கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். கட்சியின் நலன் கருதி செயல்பட வேண்டும்.

கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பதோ அல்லது வெளியேற வேண்டும் என்பதோ நம் நோக்கம் அல்ல. கட்சியின் நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும் என்பதே இடைநீக்கத்தின் நோக்கம்.

கட்சி என்பது தலைவர் என்ற தனிநபரின் முடிவு அல்ல. அது ஒரு அமைப்பின் முடிவு. உயர்நிலைக் குழுவில் கலந்தாலோசிப்பது என்பது கட்சியின் நடைமுறை. ஆனால், ஆதவ் அர்ஜுனா அதனை உள்வாங்கவில்லை'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஒரு அயோத்தி போதாதா?

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம்

முகலிவாக்கம் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது. உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் சனிக்கிழமை காலமானார். பின்னர் அவரது உடல்... மேலும் பார்க்க

விசிக-வில் இருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா கடிதம் எழுத... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு ஞாயிற்றுகிழமை முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 15 காவலர்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு அரசு மரியாதை செலுத்தினர். ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ... மேலும் பார்க்க

குகேஷுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். குகேஷை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து அவருடன் உரையாடினார். அப்போது ரஜினிகாந்த... மேலும் பார்க்க

தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல்தான்: அதிமுகவுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல்தான் என்று அதிமுகவுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இன்று நடைபெற்ற... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றவாளிகள் 23 பேர் புழல் சிறைக்கு திடீர் மாற்றம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து இரவோடு இரவாக புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை ... மேலும் பார்க்க