பாக். தாக்குதலில் இந்தியா தரப்பில் உயிரிழப்பு இல்லை: ராணுவம்
‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயருக்கு காப்புரிமை! ரிலையன்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் விண்ணப்பம்!
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயருக்கு காப்புரிமை கோரி அம்பானியின் ரிலையன்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோட்டையான பஹவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தளமான முரிட்கே ஆகியவை அழிக்கப்பட்டன. இந்த அதிரடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காக அம்பானியின் ரிலையன்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்திருக்கின்றன. இதில், ரிலையன்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் காப்புரிமை வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு இயக்குநரை அணுகியுள்ளனர்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, ரிலையன்ஸ் இன்க் மற்றும் ஐந்து நிறுவனங்கள் வர்த்தக முத்திரை கோரி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர, முகேஷ் சேத்ராம் அகர்வால், குரூப் கேப்டன் கமல் சிங் ஓபர், அலோக் கோத்தாரி, ஜெயராஜ் மற்றும் உத்தம் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.
சிந்தூர் என்பது என்ன?
சிந்தூர் என்பது திருமணமான பெண்கள் நெற்றியில் இடும் குங்குமத்தைக் குறிக்கும் என்பதால், தங்களது கண் முன்னே கணவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்த, இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் கணவனை இழந்த பெண்களின் குங்குமத்துக்கு பதில் சொல்லும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்தப் பெயரை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி கொலை
We don’t leave any stone unturned when it comes to making money.
— Ravi (@DefenceBrat) May 8, 2025
4 #trademark applications for #OperationSindoor; all filed on the same day India struck. Reliance industries being the topper of this class.
While the nation was thinking of soldiers, someone was thinking of… pic.twitter.com/VA14T9eU2Z