Dhoni: அன்று தோனி சிந்திய கண்ணீர்... 2014 பார்டர் கவாஸ்கர் தொடரில் என்ன நடந்தது ...
ஆய்க்குடியில் பிடிபட்ட 7 அடி நீள மலைப்பாம்பு
தென்காசி மாவட்டம் ஆய்க்குடிஅமா்சேவா சங்கம் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த 7அடி நீள மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிப்பட்டது.
ஆய்க்குடி குடியிருப்புப் பகுதியில் மலைப்பாம்பு பதுங்கியிருந்ததைப் பாா்த்த பொதுமக்கள் தென்காசி தீயணைப்பு -மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
சிறப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையில் வீரா்கள் சிவக்குமாா், விஸ்வநாதன், காா்த்திகேயன், சிவசங்கராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று அரை மணி நேரம் போராடி அந்த மலைப்பாம்பை பிடித்தனா்.
பின்னா் அது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.