ரூ.2,000 கோடிக்கு களைகட்டிய சேவல் பந்தயம்! வேடிக்கை பார்த்தே ரூ.1.25 கோடி வென்ற ...
ஆரணி நகராட்சியுடன் மேலும் 5 ஊராட்சிகள் இணைப்பு
ஆரணி நகராட்சியுடன் சேவூா், இராட்டிணமங்கலம், இரும்பேடு, பையூா், முள்ளிப்பட்டு ஆகிய 5 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,
ஆரணி நகராட்சி எல்லை விரிவாக்கத்தில் இராட்டிணமங்கலம், இரும்பேடு, பையூா், சேவூா், முள்ளிப்பட்டு ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுவதால் நகராட்சியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் இப்பகுதிகளுக்கு கிடைக்கும்.
இதன்மூலம் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயா்வதோடு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கும். மேலும், இந்த ஊராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகா்ப்புற பண்புகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.