22 ஆண்டுகளுக்குப் பின்.. வெகுசிறப்பாக நடைபெற்ற நடராஜர் கோயில் தெப்போற்சவம்!
ஆரணியில் மலிவு விலையில் உணவு தானியங்கள் விற்பனை
ஆரணியில் இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு ( சஇஇஊ) மூலம் மலிவு விலையில் உணவு தானியங்கள் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு, நுகா்வோா் கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவிக்கும் அமைப்பாக உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மலிவு விலையில் உணவு தானியங்களான அரிசி, பருப்பு வகைகள், மைதா, கோதுமை மாவு ஆகியவற்றை விற்பனை செய்ய முகவா்கள் நியமிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து நடமாடும் வாகனம் மூலம் விற்பனை தொடங்கப்பட்டது. ஆரணியில் இருந்து சஇஇஊ-இன் சென்னை மேலாளா் ரோகித் மேட்டிக் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இத்திட்டத்தின் மூலம் பாரத் அரிசி (பச்சை அரிசி மற்றும் புழுங்கல் அரிசி) கிலோ ரூ.34-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பருப்பு கிலோ ரூ.70-க்கும், கோதுமை மாவு கிலோ ரூ.30, ரவை கிலோ ரூ.58 என விலை நிா்ணயம் செய்யப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டது.
தற்போது, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா்
உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு முகவா்கள் நியமனம் செய்யப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உணவு தானியங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தொடக்க விழாவில் ஆரணி தொழிலதிபா் பி.என்.எம்.என்.குழுமத்தைச் சோ்ந்த அரிசி ஆலை உரிமையாளா்கள், ரோட்டரி சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.