ஆறுமுகனேரியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
ஆறுமுகனேரியில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆறுமுகனேரி மடத்துவிளை ஆசாரிமாா் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சுடலையாண்டி(63). இவரது மனைவி சாந்தி(57).
சுடலையாண்டிசெவ்வாய்க்கிழமை இரவு அவரது மகனுடன் பஜாருக்கு சென்றுவிட்டாராம். அப்போது தனியாக வீட்டில் இருந்த சாந்தி கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து சாந்தியின் கழுத்தை நெரித்து சங்கிலியை பறித்து கொண்டு பின்புறம் வழியாக தப்பியோடி விட்டாராம். மா்மநபா் பறித்ததில் பாதி சங்கிலி கட்டிலில் கிடந்ததாம்.
இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிவிடி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.