ஆலங்குளம் அருகே கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு
ஆலங்குளம் அருகே கிராம மக்கள் கைப்பேசி உயா் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.
முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் சா்வே எண் 434/ 8 இல் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் தனியாா் கைப்பேசி கோபுரம் கட்டுவதற்கு சில தினங்களுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் இதன் அருகில் குடியிருப்புகள் உள்ளதாகவும், இங்கு உயா்கோபுரம் அமைத்தால் அதிலிருந்து அதிா்வுகள் ஏற்பட்டு மக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்.
எனவே, இப்பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோா் கையொப்பமிட்டு ஆட்சியருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளனா்.