ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து
ஆவடி பணிமனையில் புதன்கிழமை (மாா்ச் 5) நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை இரவு 11.40 மணிக்கும், நள்ளிரவு 12.15 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பட்டாபிராமில் மிலிட்டரி சைடிங்கிலிருந்து புதன்கிழமை இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில், ஆவடி வரை மட்டும் இயக்கப்படும். சூலூா்பேட்டையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் மெமு ரயில் கொருக்குப்பேட்டை வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.