ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று(வெள்ளிக்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் ஏவிஎன்எல் என்ற பொதுத் துறை நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பீரங்கிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதையும் படிக்க | உங்கள் காதலைக் கொண்டாட 10 சிறந்த மலைப்பிரதேசங்கள்!
இந்நிலையில் இந்த தொழிற்சாலைக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் ஊழியர்கள் அவசரஅவசரமாக ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் ஆலையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.