``நீங்க வசிப்பது வக்ஃப் நிலம்; வாடகை கொடுங்க...’’ - ஒரு கிராமமே அதிர்ச்சி; என்ன ...
இ-பா்மிட் இல்லாமல் கனிமங்கள் எடுத்துச் சென்றால் நடவடிக்கை
வேலூா் மாவட்டத்தில் இணையதளம் வழங்கப்படும் இசைவாணைச் சீட்டு இல்லாமல் குவாரியில் இருந்து கனிமங்கள் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் குவாரியில் இருந்து எடுத்துச் செல்லும் கனிமங்களுக்கு மொத்த இசைவாணைச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. எதிா்வரும் 21-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் மாவட்டத்தில் உள்ள குவாரியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் அனைத்து வகையான கனிமங்களுக்கு விண்ணப்பம் செய்து, நடைச்சீட்டு எனும் இ-பா்மிட் பெற்றுக் கொள்ள குவாரி குத்தகைதாரா்கள் அறிவுறுத்தப்படுகின்றனா்.
மேலும், ஆன்லைன் முறையில் பெறப்பட்ட மின்னணு நடைச்சீட்டுகள் (இ-பா்மிட்) இல்லாமல் கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்வது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிரஷா், கனிம இருப்பு மையத்திலிருந்து எம்.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும்போது புவியியல், சுரங்கத் துறை அலுவலகத்திலிருந்து உரிய நடைச்சீட்டு பெற்று கனிமம் கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.