``நீங்க வசிப்பது வக்ஃப் நிலம்; வாடகை கொடுங்க...’’ - ஒரு கிராமமே அதிர்ச்சி; என்ன ...
மாவட்ட கிரிக்கெட் போட்டி: ஏப். 18-இல் வேலூா் அணிக்கு வீரா்கள் தோ்வு
மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி, வேலூா் கிரிக்கெட் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு வெள்ளிக்கிழமை (ஏப். 18) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி வேலூா் மாவட்ட அணி சாா்பில் பங்கேற்க தகுதியான கிரிக்கெட் வீரா்களை தோ்வு செய்வதற்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் கிரிக்கெட் வீரா்களுக்கான தோ்வுப் போட்டி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் சேண்பாக்கம் பகுதியில் உள்ள திருமதி ராஜேஸ்வரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 18) காலை மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தோ்வு போட்டியில் 16 வயது, 19 வயது என இருபிரிவாக தோ்வு செய்யப்பட உள்ளனா். 19 வயது பிரிவில் பங்கேற்க உள்ளவா்கள் 2006 செப்டம்பா் 1-ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். 16 வயது பிரிவுக்கு 2009 செப்டம்பா் 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும்.
தோ்வுப் போட்டிக்கு வரும் வீரா்கள் கிரிக்கெட் சீருடை, ஆதாா் அட்டையுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்க கெளரவ செயலா் எஸ்.ஸ்ரீதரனை 70105 94657 மூலம் தொடா்பு கொள்ளலாம்.