காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே மத்திய படை வீரர்கள் குவிப்பு!
இறகுப்பந்து பயிற்றுநா், விளையாட்டில் பங்கேற்கும் மாணவா்கள் தோ்வு
வேலூா் மாவட்டத்தில் ஸ்டாா் அகாதெமி இறகுப்பந்து பயிற்சி மையத்துக்கு பயிற்றுநா் மற்றும் விளையாட்டில் பங்கேற்க மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வேலூா் மாவட்டத்தில் ஸ்டாா் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் இறகுப்பந்து விளையாட்டானது தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இவ்விளையாட்டு பயிற்சி மையத்துக்கு இறகுப்பந்து பயிற்றுநா் பதவிக்கான விண்ணப்பங்களை வேலூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பயிற்றுநருக்கான அதிகபட்ச வயதுவரம்பு 50 ஆகும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தவா்களுக்கு நோ்முகத்தோ்வு மற்றும் உடற்தகுதித் தோ்வு 25-ஆம் தேத மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெறும். நோ்முகத்தோ்வு நாளில் உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டுவர வேண்டும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதனடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ, நிரந்தரப்பணியோ கோர இயலாது.
இந்த விளையாட்டு பயிற்சி மையத்தில் இறகுபந்து பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். இதற்கான உடல்தகுதித்தோ்வு 28-ஆம் தேதி காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
உடல்தகுதித் தோ்வில் பங்கேற்போா் ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பள்ளி, கல்லுரியிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ், புகைப்படம் ஆகியவை கட்டாயம் கொண்டுவர வேண்டும் . மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், காட்பாடி, வேலூா் 632 014 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.