செய்திகள் :

மழை ஈரப்பதம்: கட்டுமான பணியின்போது மண்சுவர் விழுந்து தொழிலாளி பலி! - கரூர் சோகம்

post image

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பஞ்சமாதேவியைச் சேர்ந்த காளியப்பன் மகன் பொன்னுசாமி என்பவரது புதிய வீடு கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் கரூர் உப்பிடமங்கலம் அருகே உள்ள பொரணி பகுதியைச் சேர்ந்த சிவாஜி(வயது: 40) , மாயவன் (வயது: 24), வெண்ணமலை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது: 44) ஆகிய மூவரும் கட்டுமான பணிகளை செய்து வந்தனர்.

instant spot

அப்போது, எதிர்பாரதவிதமாக, பொன்னுசாமி வீடு அருகே உள்ள மஞ்சுளா என்பவரது மண் வீடு நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக திடீரென இடிந்து சரிந்து விழுந்தது. இதில், சிவாஜி இடிப்பாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, கரூர் தீயணைப்பு துறைக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ராஜேந்திரன், மாயவன் ஆகிய இருவரையும் மீட்டனர்.

இதில், ராஜேந்திரன் என்ற தொழிலாளிக்கு தலையில் காயமும், மாயவன் என்ற தொழிலாளிக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில், அவர்கள் இடிபாடுகளுக்கிடையில் இருந்து மீட்கப்பட்டனர்.

instant spot

அதனைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது, மண் சரிந்து விபத்து ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க

இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ... மேலும் பார்க்க

Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோ... மேலும் பார்க்க

செருப்பால் அடித்த டெக்னீஷியன்; வெளுத்து வாங்கிய தூய்மை பணியாளர்கள்! - மருத்துவமனையில் நடந்தது என்ன?

அருப்புக்கோட்டையில் துப்புரவு பணியாளரை மருத்துவமனை‌ ஊழியர் செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "... மேலும் பார்க்க

நெல்லை: பென்சில் தகராறில் 8-ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; சக மாணவர் வெறிச்செயல்!

நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதனை ஒழிக்க மாணவர்கள் மத்தியில் கல்வித்துறையினர் , காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட... மேலும் பார்க்க

பைக்கில் வேகமெடுத்த சிறுவன்; முதியவர் மீது மோதி காயம்.. அம்மா மீது வழக்கு - என்ன நடந்தது?

சென்னை சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சம்பத் (76). கடந்த 11-ம் தேதி இரவு சம்பத், மார்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலிகிராமம் அம்பேத்கர் தெருவில் நடந்து சென்ற... மேலும் பார்க்க