செய்திகள் :

காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே மத்திய படை வீரர்கள் குவிப்பு!

post image

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே உள்ளிட்டோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள், அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு வெளியே இன்று போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதையடுத்து, தில்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : தமிழில் மட்டுமே அரசாணை: தமிழக அரசு உத்தரவு

மோடி பாணியில் சந்திரபாபு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு 99 பைசாவுக்கு 21 ஏக்கர் நிலம்! செம ஐடியா!!

துறைமுக நகரமாக இருக்கும் விசாகப்பட்டினத்தை, தகவல்தொழில்நுட்ப நகரமாக மாற்றுவதற்கான முதற்கட்டமாக, டிசிஎஸ் நிறுவனத்துக்கு 21.16 ஏக்கர் நிலத்தை அடையாளத் தொகையாக வெறும் 99 பைசாவுக்குக் கொடுத்திருக்கிறது ஆந... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் பிணையில் வந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்: பாஜக

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பிணையில் வெளிவந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.நேஷனல் ஹெரால்ட் வழக்கி... மேலும் பார்க்க

2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜர்!

ஹரியாணா நில ஒப்பந்தம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். மேலும் பார்க்க

ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்திய அரசு

நமது சிறப்பு நிருபர் நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள்அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் சுற்றுலா நிறு... மேலும் பார்க்க

கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினா் இருவா் உயிரிழப்பு

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினா் இருவா் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: யானைகளால் த... மேலும் பார்க்க

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்... மேலும் பார்க்க