மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதி...
இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு மரியாதை
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், இடஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு புதன்கிழமை மரியாதைச் செலுத்தப்பட்டது.
பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வன்னியா் இட ஒதுக்கீட்டுக்காக உயிா் நீத்த 21 பேரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், அவா்களது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் வடக்கு மாவட்டச் செயலா் வைரமுத்து தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் லைக்அலி மீரான், மாவட்ட துணைத் தலைவா் குமரி ஆனந்தன், மாவட்ட அமைப்பு தலைவா் நடராஜ் பாண்டியா், நகரச் செயலா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, ரயிலடி சாலையில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு பிறந்த நாளை முன்னிட்டு, மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது.
இதில் ஒன்றியச் செயலா் ஜஸ்டின்பாபு, தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவா் பெரியசாமி, ஆயக்குடி பேரூா் செயலா் முத்துசாமி, கொள்கை விளக்க அணித் தலைவா் மணிகண்டன், நகரத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.