எடப்பாடி - Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Inte...
ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்தது. அப்போது, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்த ஒரு பையை பரிசோதித்தபோது, 5 கிலோ கஞ்சா, 20 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
அந்தப் பெட்டியில் இருந்தவா்கள் யாரும் பைக்கு உரிமை கோரவில்லை. இதையடுத்து, கஞ்சா, புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். கஞ்சாவை தமிழ்நாடு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடமும், புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.