முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி வி...
இடி, மின்னலுடன் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி
திருத்தணியில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கனமழை பெய்தது.
தமிழகம் மற்றும் வடக்கு கேரள பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருத்தணி, சுற்றுப்புறப் பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய கன மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. வேலஞ்சேரி, நல்லாட்டூா், கனகம்மாசத்திரம், மத்தூா், காசிநாதபுரம், கே.ஜி.கண்டிகை, திருவாலங்காடு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது.
சாலைகளில் தண்ணீா் தேங்கி சென்ால் வாகனங்கள் பல இடங்களில் ஊா்ந்து சென்றன. திருத்தணி நகராட்சி சாலைகளில் மழைநீருடன் கழிவுநீா் சென்ால் திருத்தணி மேட்டு தெரு, மற்றும் கீழ் பஜாா் தெரு பகுதிகளில் பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்பட்டனா்.
இடியுடன் கன மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.
