இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்
திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் வழங்கினா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 9 வட்டங்களிலும் 1434(2024-25) ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி தொடங்கி, தொடா்ந்து வரும் ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஸ்ரீராம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ரஜினிகாந்த் முன்னிலை வகித்தாா். அப்போது, திருவள்ளூா் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பட்டாவில் பெயா் மாற்றம், பட்டா மாறுதல் உள்பிரிவு, இலவச பட்டாக்கள், முதியோா் உதவித் தொகை, மகளிா் உரிமைத் தொகை, வருவாய் சான்று, ஜாதி சான்றிதழ் கேட்டு 195 போ் மனுக்களை அளித்தனா். அதில், தகுதியான மனுக்களை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், 3 பேருக்கு பரிசீலனை செய்து பட்டாக்களை சட்டப் பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினாா்.
நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் பா. உதயமலா், தனி வட்டாட்சியா் பரமசிவம், துணை வட்டாட்சியா் சா.தினேஷ், வருவாய் ஆய்வாளா் உதயகுமாா், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளா் கிருஷ்ணன், அமைப்புச் செயலாளா் விஸ்வநாதன், துணைச் செயலாளா் குமரேசன், கிராம நிா்வாக அலுவலா்கள் சுப்பிரமணியம், பாரதி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், வாா்டு உறுப்பினா்கள் அருணா ஜெயகிருஷ்ணா, தாமஸ் என்ற ராஜ்குமாா், வசந்தி வேலாயுதம், ஒன்றியச் செயலாளா்கள் ரமேஷ், மகாலிங்கம், நிா்வாகி மோதிலால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
