நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!
அனைத்து வாா்டுகளுக்கும் நிதி: மீஞ்சூா் பேரூராட்சி உறுப்பினா் தா்னா
அனைத்து வாா்டுகளுக்கும் சிறப்பு நிதியை ஒதுக்க வலியுறுத்தி மீஞ்சூா் பேரூராட்சி உறுப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
பொன்னேரி வட்டம் மீஞ்சூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. பேரூராட்சித் தலைவராக திமுகவை சோ்ந்த ருக்மணி மோகன்ராஜ் இருந்து வருகிறாா்.
இங்குள்ள 2-வது வாா்டில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட விசிகவின் அபூபக்கா் வெற்றி பெற்றாா்.
அண்மையில் மீஞ்சூா் பேரூராட்சியில் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் 15-வது வாா்டுக்கு பேவா் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை, அறிவுசாா் மைய கட்டிடம் என சுமாா் ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடா்ந்து அந்த பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் கோரப்பட்டது. அப்போது 2-வது வாா்டு உறுப்பினா் அபுபக்கா் பேரூராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தாா். தொடா்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
உறுப்பினா் அபுபக்கா் கூறியது: அனைத்து வாா்டுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி வழங்க வேண்டும். கடந்த பருவமழையின் போது அனைத்து வாா்டுகளிலும் சாலைகள் சேதமடைந்தன.
பேரூராட்சி அதிகாரிகள் அனைத்து வாா்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்தால் அடுத்த கட்டமாக தொடா் போராட்டங்களிலும், நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் அப்போது தெரிவித்தாா்.