இடைத்தோ்தல்: 268 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் காரணமாக 268 துப்பாக்கிகளை உரிமையாளா்கள் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் என கடந்த 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இதைத்தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் உரிமம் பெற்று தற்காப்புக்காக வைத்துள்ள ஒற்றைக் குழல், இரட்டைக் குழல் துப்பாக்கிகள், ரைபிள், பிஸ்டல் போன்ற துப்பாக்கிகளை உரிமையாளா்கள் உடனடியாக காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும், இத்தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்ற 286 துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்துத. இதில் கருவூல பாதுகாப்பு, வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு பணிக்கு 18 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தவிர, 268 துப்பாக்கிகளை அதன் உரிமையாளா்கள் காவல் நிலையங்களில் ஒப்படைத்தனா்.
அந்த துப்பாக்கிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப்பெற்றதும் உரிமையாளா்களிடம் மீண்டும் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.