'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
இணையம் முழுக்க அகரம் சூர்யா!
அகரம் விதைத் திட்டத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முகங்களில் ஒருவரான சூர்யா நடிப்பைத் தாண்டி பல நலத்திட்ட உதவிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார். அவரால் ஆரம்பிக்கப்பட்ட அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் பல்லாயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அகரம் விழாவைக் கொண்டாடியும் வருகின்றனர். இந்தாண்டுடன் அகரம் அறக்கட்டளையைத் துவங்கி 20 ஆண்டுகளும் அதன் விதைத் திட்டம் 15 ஆண்டுகளையும் நிறைவு செய்கிறது.
இந்த இடைப்பட்ட காலங்களில் அகரம் முன்னெடுத்த செயல்பாடுகள், பயன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.
இதனைக் கொண்டாடும் விதமாக விதைத் திட்டத்தின் 15 ஆம் ஆண்டு விழா சென்னையில் நேற்று (ஆக. 3) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், அகரம் அறக்கட்டளையால் பயன்பெற்ற 8 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் வறுமையால் வாடிய பல மாணவர்களின் வாழ்க்கையை அகரம் மாற்றியமைத்ததை சம்பந்தப்பட்டவர்கள் கூறும்போது சூர்யாவும் ஜோதிகாவும் கண் கலங்கினர்.
அகரம் விதைத் திட்டம் உருவாக்கிய பொறியாளர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் அவரவர் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவைப் பலரும் பாராட்டி வருவதுடன் அவரைப் போன்றவர்கள் மீது வன்மத்தைக் கொட்ட எப்படி மனது வருகிறது எனக் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இந்நிகழ்வில், நடிகர் கமல் ஹாசன் இயக்குநர்கள் வெற்றி மாறன், த. செ. ஞானவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்