செய்திகள் :

9-ஆவது முறையாக சாம்பியன்; பிரேஸில் ஆதிக்கம்!

post image

தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெறும் மகளிருக்கான கோபா அமெரிக்கா ஃபெமெனினா கால்பந்து போட்டியில், பிரேஸில் ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

10-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் தற்போது பிரேஸில் 9-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும், இந்த ஆண்டுடன் கடைசி 5 முறையும் அந்த அணியே தொடா்ந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஈகுவடாரின் குய்டோ நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரேஸில் தரப்பில் ஏஞ்செலினா (45+9’), அமாண்டா குட்டெரெஸ் (80’), மாா்தா (90+6’, 105) ஆகியோா் கோலடிக்க, கொலம்பியா தரப்பில் லிண்டா கேசிடோ (25’), மெய்ரா ராமிரெஸ் (88’), லெய்சி சான்டோஸ் (115’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். பிரேஸில் வீராங்கனை டாா்சியேன் (69’) தவறுதலாக ஓன் கோல் அடித்தாா்.

இவ்வாறாக நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் ஆட்டம் 4-4 கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பிரேஸில் 5-4 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியிலேயே அதிக கோல்கள் (6) அடித்தவா்களாக பிரேஸிலின் அமாண்டா குட்டெரெஸ், பராகுவேயின் கிளாடியா மாா்டினெஸ் தோ்வாகினா்.

தடகளம்: முரளி ஸ்ரீசங்கா் சாம்பியன்

கஜகஸ்தானில் நடைபெற்ற கொசானோவ் நினைவு தடகள போட்டியில், இந்தியாவின் நீளம் தாண்டுதல் வீரா் முரளி ஸ்ரீசங்கா் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினாா்.மொத்தம் இருந்த 6 வாய்ப்புகளில், அவா் தனது சிறந்த முயற்சியாக ... மேலும் பார்க்க

கௌஃபுக்கு அதிா்ச்சி அளித்த போகோ!

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 85-ஆம் நிலையில் இருக்கும் கனடாவின் விக்டோரியா போகோ, உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிற... மேலும் பார்க்க

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

நடிகர் அஜித் குமார் அவருடன் பணியாற்றிய இயக்குநர்களைச் சந்தித்துள்ளார். நண்பர்கள் நாளான இன்று பலரும் தங்கள் நண்பர்களுடான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் நினைவ... மேலும் பார்க்க

அன்பும் அரவணைப்பும்... சக இயக்குநர்களுடன் கௌதம் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் சக இயக்குநர்களுடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், கௌதம் வாசுவே மேனன், மிஷ்கின், லிங்குசாமி, வசந்த பாலன், சசி, ... மேலும் பார்க்க

ஷ்ருதி ஹாசன் கிளாமரான நடிகை... ரஜினியின் சர்ச்சை பேச்சு!

கூலி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி நடிகை ஷ்ருதி ஹாசனை கிளமாரான நடிகை எனப் பேசியது சர்சையக் கிளப்பியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்ப... மேலும் பார்க்க