இதுவரை பயன்படுத்தாத புதிய IMAX தொழில்நுட்பம் - மீண்டும் ஒரு பிரமாண்டத்துக்கு தயாராகும் நோலன்!
படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் கிறிஸ்டோஃபர் நோலன், அடுத்து தான் இயக்கவிருக்கும் படத்தில் நவீன ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளார்.
`ஸ்பைடர்மேன்' புகழ் டாம் ஹாலன்ட் (Tom Holland), மாட் டாமன் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் . மிஷன் இம்பாசிபிள் பாணியில் ஸ்பை த்ரில்லராக உருவாக உள்ளதாக சொல்லப்படும் இந்த திரைப்படம், 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஐமேக்ஸ்... திரைப்படப் பிரியர்கள் அனைவரும் அறிந்த திரைப்பட தொழில்நுட்பம்.
வழக்கமான 2.40:1 இல்லாமல் 1.90:1 என்ற ரேஷியோவில் (RATIO)அகலமான பெரிய திரை கொண்டது ஐமேக்ஸ் தொழில்நுட்பம். தமிழ் சினிமாவில் தற்சமயம் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படம் முழுவதுமாக ஐமேக்ஸ் தொழில்நுட்ப கேமிராவில் உருவாகி வருவது குறித்து கேள்விபட்டிருப்போம்.
ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தை உலக சினிமாவில் பிரபலபடுத்தியவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவரின் திரைப்படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இவர் அடுத்து எடுக்கப் போகும் திரைப்படத்தில் இதுவரையில் பயன்படுத்தாத ஐமேக்ஸின் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளதாக ஐமேக்ஸ் நிறுவன CEO ரிச் கெல்போன்ட் (RICH GELFOND)கூறியுள்ளார். இது குறித்து அவர், "கிரிஸ்டோபர் நோலன் எப்போதும் புதிய பரிசோதனைகளைச் செய்ய முயற்சி செய்கிறார். உதாரணமாக, டெனெட் படத்தில் அவர் நாயகனின் காலம் பின்நோக்கி [reverse] செல்வது போல் படம்பிடித்தார். அவர் எப்போதும் தனது கதைகளை கூறுவதற்கு ஒரு புதிய முறையை உருவாக்குகிறார்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அவர் எங்களை அணுகி, அவரது அடுத்த படத்தில் பயன்படுத்த ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறினார், அதற்காக நாங்களும் எங்கள் ஐமேக்ஸ் (IMAX) குழுவும் சிறப்பாக வேலை செய்துள்ளோம். அதைப் பற்றி அவர்தான் பேச வேண்டும். தற்போது ஐமேக்ஸில் முன்பை விட இன்னும் அதிகமாக அவரால் செய்ய முடியும்." என்றார்.
வழக்கமான சினிமாக்களை விட ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் பதிவு செய்ய செலவு அதிகம் பிடிக்கும்.
கடந்த 2008-ம் ஆண்டு `தி டார்க் நைட்’ திரைப்படத்தில் ஐமேக்ஸ் 65 mm கேமரா பயன்படுத்தியதால், செலவு அதிகம் ஆகும் என வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மறுத்தது. ஆனால் இவர் அந்த தொழில்நுட்ப கேமராதான் வேண்டுமென கேட்டு வாங்கினார். அந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவு அதிகம் பாராட்டப்பட்டது .
ரிவர்ஸ் க்ரோனாலாஜி [reverse chronology] கதையான டெனட் [tenet] திரைப்படத்தில் ஒரே காட்சியில் ஒரே ஆள் முன் செல்லும்படியாகவும் பின் வரும்படியாகவும் [வீடியோ ரிவர்ஸ் செய்வது போன்ற] நடக்கும் சண்டைகாட்சி பிரமிப்பூட்டும்படியாக இருக்கும்.
அதேப்போல் ஓப்பன்ஹெய்மர் [Oppenheimer] திரைப்படத்தில் பிளாக் அன்ட் ஒயிட்டில் 70mm ஐமேக்ஸ் கேமரா பயன்படுத்தினார். இது மிகப்பெரிய பாராட்டு பெற்றது.
தற்சமயம் உருவாக்கி உள்ள இந்த ஐமேக்ஸ் தொழில்நுட்பமானது AI தொழில் நுட்பத்தை உள்ளடக்கி இருக்குமென கூறப்படுகிறது.
தன் திரைப்படங்களில் VFX மற்றும் CGI பயன்பாட்டினை குறைத்து பிராக்டிகல் EFXஐ பயன்படுத்தும் நோலன் வரப்போகும் தனது புதிய திரைப்படத்தில் எத்தகைய பிரம்மிப்பினை ஏற்படுத்தப் போகிறார் எனப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...