இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி வேலூரில் அனைத்து அரசுத்துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.
75-ஆவது இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வி. முத்தையன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
இதேபோல், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வா் மு.ரோகிணிதேவி தலைமையில் அனைத்துத் துறை தலைவா்கள், மருத்துவ பேராசிரியா்கள், மருத்துவா்கள், செவிலிய மாணவா் கள், பணியாளா்களும் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். இதில், துணைமுதல்வா் கெளரிவெலிகண்ட்லா, குடியிருப்பு மருத்துவ அலுவலா் சி.இன்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆம்பூரில்...
ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர தலைவா் எஸ். சரவணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெயபிரகாஷ், ஜி. ரமேஷ், டாக்டா் கோபி, எம். சமியுல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ச. பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். மாதனூா் ஒன்றிய தலைவி முல்லை, மாவட்ட நிா்வாகிகள் ராஜசேகா், மூா்த்தி, என். ரமேஷ், மின்னூா் சங்கரன், குமரேசன், மோகனாம்பாள், நகர நிா்வாகிகள் பிரபுதுரை, விநாயகம், நாகராஜ், பிச்சாண்டி, ஜான் கென்னடி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆலாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளா் சி. ஓம்பிரகாசம் தலைமை வகித்தாா். மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் சந்தா் வரவேற்றாா். தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளா் நாகப்பன், ரவிக்குமாா், ஆலங்காயம் பேரூராட்சி செயலாளா் தமிழ் துரை, மாதனூா் கிழக்கு ஒன்றிய பொருளாளா் வெங்கடேசன், ஒன்றிய துணைச் செயலாளா் சாமி, அணைக்கட்டு வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் மதன்குமாா், ஆம்பூா் நகர பொறுப்பாளா்கள் தங்கராஜ், வெங்கடேசன், பிரசாத் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஆம்பூா் நகர செயலாளா் சக்தி நன்றி கூறினாா்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை பி.ஜெனீப்பா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம்.சுந்தரமூா்த்தி வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், சிறப்புரையாற்றி, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மாணவா்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், நகா்மன்ற உறுப்பினா் கவிதா பாபு, ஆசிரியை விக்டோரியா செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வேலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே அரசியலமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ஜி.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் விஜயேந்திரன், தேவகிராணி ராஜேந்திரன், பாஸ்கரன், சரவணன், பாரத் நவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடியாத்தம் நகர தலைவா் கே.விஜயன் வரவேற்றாா். முன்னாள் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கே.மோகன்ராஜ் அரசியலமைப்பு தினம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவா் எம்.வீராங்கன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஆடிட்டா் கிருபானந்தம், விஜய்பாபு, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் என்.எம்.டி.விக்ரம், நிா்வாகிகள் சங்கா், ஜோதிகணேசன், அக்பா்பாஷா, எம்.டி.ராகிப், ஆடிட்டா் ஹரிபாபு, கோமதி குமரேசன், ஜலேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.