செய்திகள் :

இந்திய சினிமாவில் ரூ. 1 கோடி சம்பளம் பெற்ற முதல் நடிகை யார் தெரியுமா?

post image

இன்றைய பான் இந்திய வணிக சினிமாக்களில் நாயகன் வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்குகூட நாயகிகளுக்கு வழங்கப்படுவதில்லை.

ஆனால், 1980-களின் இறுதியில் பாலிவுட் படங்களில் நடிக்க பிரபல நடிகையொருவர் நட்சத்திர நடிகர்களைவிட அதிக சம்பளம் பெற்றார் என்றால் நம்ப முடியுமா? அதுவும் அந்த நடிகை தமிழிலிருந்து ஹிந்திக்குச் சென்றவர் என்றால் கிள்ளித்தான் பார்க்க வேண்டும்.

நடிகை ஸ்ரீதேவிதான் இந்த பெருமைக்குச் சொந்தக்காரர். 1990-களின் துவக்கத்தில் இன்றைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோர் ரூ. 50 - ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோதே ஸ்ரீதேவி 1993 ஆம் ஆண்டு வெளியான, ‘ரூப் கி ராணி சரோன் கா ராஜா’ (roop ki rani choron ka raja) படத்தில் நடிக்க முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் பெற்று ஒட்டுமொத்த பாலிவுட்டையே அன்று திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார்.

இதையும் படிக்க: நடிகர் அஜித்துடன் இணைந்து நடிப்பேன்: விஜய் சேதுபதி

அவ்வளவு பெரிய சம்பளம் ஆண் நடிகர்களுக்கே கிடைக்காதபோது அதனைப் பெற்ற ஸ்ரீதேவிக்கு அப்போது 30 வயதுதான்.

ஸ்ரீதேவி - ‘ரூப் கி ராணி சரோன் கா ராஜா படத்தின்போது!

தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த ஸ்ரீதேவிக்கு ஹிந்தி திரையுலகம் மிகப்பெரிய வாழ்க்கையையே அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். பொருளாதாரம் மற்றும் புகழ் ரீதியாக அன்று ஸ்ரீதேவி அடைந்த உச்சத்தை இன்றைய நடிகைகளால்கூட எட்டமுடியவில்லையே!

சுவாரஸ்யமாக, ஸ்ரீதேவிக்கு ரூ. 1 கோடி சம்பளத்தை வழங்கியது தயாரிப்பாளர் போனி கபூர். இவர் ஸ்ரீதேவியை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்கிற மகள்கள் உள்ளனர்.

கணவர் போனி கபூர் மற்றும் மகள்களுடன் ஸ்ரீதேவி!

கடந்த 2018 ஆம் ஆண்டு துபையில் ஸ்ரீதேவி உயிரிழந்ததைத் தொடர்ந்து இரண்டு மகள்களும் அடுத்த சில ஆண்டுகளிலேயே சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் முக்கிய நடிகைகளாக இருக்கின்றனர்.

பிளாக்பஸ்டரான சாவா!

சத்ரபதி சம்பாஜியின் கதையாக உருவான சாவா திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது. சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியின் கதையாக உருவான சாவா (chchaava) படத்தில் சம்பாஜியாக நடிகர் விக்கி கௌஷலும் நாயகியாக ரஷ்மி... மேலும் பார்க்க

எம்பாப்வே ஹாட்ரிக் கோல்..! மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்திய ரியல் மாட்ரிட்!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இருந்து மான்செஸ்டர் சிட்டி வெளியேறியது. ஐரோப்பாவில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பிளே-ஆஃப் லெக் 2 போட்டியில் ரியல் மாட்ரிட் அணி மான்செஸ்டர் ச... மேலும் பார்க்க

வணங்கான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நாயகனாக அருண் விஜய் நடித்துள்ள இப்படத்தில் ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள... மேலும் பார்க்க

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.20-02-2025வியாழக்கிழமைமேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும... மேலும் பார்க்க

பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கேரளத்துக்கு எதிராக குஜராத் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட... மேலும் பார்க்க

ஜொ்மனிக்கு இந்தியா பதிலடி

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில், இந்தியா 1-0 கோல் கணக்கில், உலக சாம்பியன் ஜொ்மனியை புதன்கிழமை வென்றது.அந்த அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை 1-4 கோல் கணக்கில் த... மேலும் பார்க்க